செஞ்சியில் சிலம்பாட்ட கலைஞர்கள் மாநாடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

செஞ்சியில் நடந்த சிலம்பாட்ட கலைஞர்கள் மாநாட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்.

Update: 2023-10-22 04:03 GMT

பம்பை, உடுக்கை, சிலம்பாட்ட கலைஞர்கள் நலச்சங்க மாநாடு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை பம்பை, உடுக்கை, சிலம்பாட்ட கலைஞர்கள் நலச்சங்கத்தின் மாநாடு செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, முன்னதாக பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சிகளுடன் கலைஞர்கள் செஞ்சி நகரில் இருந்து ஊர்வலமாக நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு வந்தனர். இதற்கு செஞ்சி பேரூராட்சிமன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான். ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்தியமங்கலம் கலை பயிற்சி நிறுவனர் சுல்தான் ஷா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார், இதில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற காஞ்சிபுரம் சுந்தரமூர்த்தி, சத்தியமங்கலம் தணிகாசலம், காஞ்சிபுரம் மணிவண்ணன், தமிழ்நாடு உடுக்கை, பம்பை, சிலம்பாட்ட தொழிலாளர் சங்க தலைவர் ஜெகநாதன். விக்கிரவாண்டி வட்ட தலை வர் வர்ணமுத்து, ஆற்காடு வட்ட தலைவர் மணிகண்டன், விண்ணம்பூண்டி தாஸ், அய்யன் தோப்பு சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஞ்சி வட்ட பம்பை, உடுக்கை, சிலம்பாட்ட கலை ஞர்கள் நலச்சங்க தலைவர் துரைசாமி, செயலாளர் செல்வம், துணை தலைவர் சம் பத்து, பொருளாளர் முனுசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News