ஏரிகளில் இருந்து வண்டல், களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்!
விவசாய பணி மற்றும் பானை செய்வதற்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-05 10:18 GMT
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண் ஆகியவற்றை விவசாய பணி மற்றும் பானை செய்வதற்கு இலவசமாக எடுக்க அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுபாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து தாசில்தாருக்கு அனுப்பி 10 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ஆகியோரை அணுகலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.