திருத்தணி முருகன் கோயிலில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-06-01 07:40 GMT

திருத்தணி முருகன் கோயிலில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் முருகன் கோவிலுக்கு சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் தன் குடும்பத்தாருடன் கோவிலுக்கு வந்தார்.  அவரை கோவில் அறங்காவலர்கள் மோகனன், நாகன் மற்றும் கோவில் அதிகாரிகள்  வரவேற்றனர். பின்னர் கோவிலுக்குள் சென்று விநாயகர், முருகர் வள்ளி,தெய்வானை, சண்முகர்  சன்னதிக்கு  சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.   பின் கோவில் சார்பில் மலர் மாலை அணிவித்து. பிரசாதம்  வழங்கப்பட்டது. இதன் பின்னர் காஞ்சிபுரம் புறப்பட்டு சென்றார். சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு  போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News