நாமக்கல் வழியாக புதிய ரயில்கள் இயக்க சின்ராஜ் எம்பி வலியுறுத்தல் !

நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் சின்ராஜ் எம்பி கூறியுள்ளார்.

Update: 2024-02-28 10:47 GMT
சேலம் ரயில்வே கோட்டதிற்கு உட்பட்ட  இன்று 28.02.2024 சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தெற்கு இரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் MP கலந்துகொண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், ரயில் நிறுத்தம், பயணிகளுக்கான வசதிகள், நாமக்கல் கூட்ஸ்செட் பகுதியில் உள்ள மின்விளக்குகள் சரி செய்தல், கூட்ஸ்செட் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சரி செய்தல் மற்றும் நாமக்கல் ரயில் நிலையத்தின் புதிய கட்டுமான பணிகளை விரைந்து செயல்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி,தர்மபுரி,மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் மேட்டூர் மாநிலங்களவை உறுப்பினர், ரயில்வே துறையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News