திருப்பூரில் பயிர்கள் கருகி அழியும் சூழ்நிலை:ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் சீரற்ற முறையில் இருப்பதால் பயிர்கள் கருகி அழியும் சூழ்நிலை நிலவுவதாக விவசாயிகள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-29 13:33 GMT

மனு வழங்கிய விவசாயிகள்

திருப்பூரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் சீரற்ற முறையில் இருப்பதால் பயிர்கள் கருகி அழியும் சூழ்நிலை நிலவுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மின் பகிர்மான அவிநாசி, கானூர் , கருவலூர் , சேவூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்காததாலும் ,  குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டதாலும் இந்த பகுதியில் விவசாயிகளின் வாழை , தென்னை ,  கரும்பு ,  காய்கறி , 

மரவள்ளி உள்ளிட்ட பயிரிடப்பட்டவைகள் முற்றிலும் கருகி வரும் சூழல் உருவாகி இருப்பதாகவும் ,  ஏற்கனவே கொடுத்து வரும் மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக அதுவும் சீர் இல்லாமல் இருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ,

பல வகையில் நிதி திரட்டி கடன் பெற்று பயிர் செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய மின்சாரம் இல்லாததால் பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதால் விவசாயிகளின் உரிமை மின்சாரத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும் , எட்டு மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மும்மனை மின்சாரம் தற்போது இரண்டு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் , 

 குறைந்த அழுத்தம் மின்சார விநியோகத்தை சீர் செய்ய வேண்டும்  என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆட்சியரிடம் விவசாயிகள் நேரடியாக தங்கள் கோரிக்கை மனுவை ஆளித்தனர்

விவசாயிகளிடம் கோரிக்கையை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News