சிவகங்கையில் நூலகம் திறப்பு விழா !
சிவகங்கையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 07:35 GMT
சிவகங்கையில் நூலகம் திறப்பு விழா
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் துரை ஆனந்த் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் கார் கண்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.