சிலிண்டர் விலை குறைப்பு - நன்றி தெரிவித்த சிவகங்கை பெண்கள்

சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்கப்பட்ட நிலையில் அதற்கு சிவகங்கை பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-03-09 07:40 GMT

நன்றியும் தெரிவித்த பெண் 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக மகளிர் தின ஸ்பெஷல் அறிவிப்பாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில் சிலிண்டர் விலை குறைப்பால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறையும். சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நலமான வாழ்க்கையையும், ஆரோக்கியமான சூழலையும் உறுதி செய்ய முடியும். மேலும் இந்த அறிவிப்பு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்கள் எளிதான வாழ்க்கை வாழ்வதை உறுதிசெய்வது போன்ற பாஜகவின் கொள்கைக்கு ஏற்ப உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்நிலையில் சிவகங்கையை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு விலை குறைப்பு மிகப்பெரும் மகிழ்ச்சி அளிப்பாதாகவும், பாரத பிரதமருக்கு நன்றியும் தெரிவித்தனர். மேலும் இதன் மூலம் பணத்தை சேகரித்து மற்ற தேவைக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News