சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- 2 பேர் கைது

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியான சம்பவம், தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-10 14:55 GMT
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் சரவணன்(55). இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று கீழதிருத்தங்கல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட செங்கமலபட்டியில் சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் இறுதிகட்ட பணிகள் நடக்கும் 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மருமகள் என 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். விபத்து சிவகாசி கிழக்கு போலீஸார், ஆலை உரிமையாளர் சரவணன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த திருத்தங்கல் முருகன் காலனியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன்(39), சிவகாசி நேஷனல் காலனியைச் சேர்ந்த போர்மேன் சுரேஷ் பாண்டியன்(41)ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, முத்துகிருஷ்ணன், சுரேஷ் பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News