சிவகாசி : பட்டாசு நிர்வாகிகளை சந்தித்த பாஜக வேட்பாளர் ராதிகா

சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்களை சந்தித்து பாஜக வேட்பாளர் ராதிகா ஆதரவு திரட்டினார்.;

Update: 2024-03-27 14:27 GMT
சிவகாசி:பட்டாசு உற்பத்தியாளர்கள் நிர்வாகிகளை சந்தித்த பாஜக வேட்பாளர் ராதிகா.

சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பாஜக வேட்பாளர் ராதிகா.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்களை,பாஜக வேட்பாளர் ராதிகா,அவரது கணவர் சரத்குமாருடன் சேர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் சரத்குமார்,மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து நிலையில், திடீர் திருப்பமாக தனது கட்சியை சரத்குமார் பாஜகவுடன் இணைத்தார்.

Advertisement

இதை அடுத்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட சரத்குமாரின், மனைவி ரதிகாவிற்கு பாஜக தலைமை சீட் வழங்கியது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சிவகாசியில் உள்ள முக்கிய பட்டாசு ஆலை அதிபர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) தலைவர் கணேசன் உள்ளிட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

Tags:    

Similar News