குங்கும வண்ண அலங்காரத்தில் பேச்சியம்மன் காட்சி
சிவகாசி ஸ்ரீபேச்சியம்மன் கோவில் மாசி பிரமோற்சவ திருவிழாவையொட்டி அம்மன் குங்கும வண்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகாசியிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபேச்சியம்மன் கோவில் மாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக, ஸ்ரீபேச்சியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து,மூன்றாம் நாள் ஸ்ரீபேச்சியம்மன் குங்கும வண்ண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மாசி பிரமோற்சவ திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலம், வரும் 8ம் தேதி (வெள்ளி கிழமை) காலை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து,ஸ்ரீபேச்சியம்மன் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை, ஸ்ரீபேச்சியம்மன் கோவில் நிர்வாகிகளும், திருவிழா உபயதாரர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.