சிவகாசியில் வேலை நிறுத்த போராட்டம் நிறைவு: உற்பத்தியை தொடங்கிய ஆலைகள்
சிவகாசியில் கடந்த 18 நாட்களாக நீடித்து வந்த சிறு பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் நிறைவடைந்து வழக்கம் போல பட்டாசு உற்பத்தியை தொடங்கிய ஆலைகள்.
கடந்த 18 நாட்களாக நீடித்து வந்த சிறு பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் நிறைவடைந்து இன்று வழக்கம் போல பட்டாசு உற்பத்தியில் ஈடுபட உள்ளதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் (டாப்மா) அறிவித்துள்ளனர். சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை,
எடுப்பதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் படி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் கடந்த மே 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சிவகாசி சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாரத்தை இழந்து தவித்து வந்தனர். தொடர் வேலை இல்லாததால் பட்டாசு தொழிலாளர்கள் அன்றாட குடும்பச் செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் சாத்தூர் எம்எல்ஏ ரகுராம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் தொழிலாளர் மற்றும் அவர்களது குழந்தைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் இன்று ஜூன் 11 தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பணியினை துவங்க சங்க உறுப்பினர்கள் அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக (டாப்மா) தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர்,
அறிவித்துள்ளனர். கடந்த 18 நாட்களாக நீடித்து வந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நிறைவடைந்து இன்று முதல் வழக்கம் போல பட்டாசு உற்பத்தியில் பட்டாசு ஆலைகள் ஈடுபட்டனர் .
இதனால் வேலை வாய்ப்பிழந்த பட்டாசு தொழிலாளர்கள் மீண்டும் ஆலைகள் இயங்க உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.