40 நிமிடத்தில் 10. 1 கி.மீ., தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ஜனகன் என்ற இளைஞர் 40 நிமிடத்தில் 10.1 கி.மீ., தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-02-05 13:13 GMT
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த A. ஜனகன் என்ற இளைஞர் ஸ்கேட்டிங்கில் உலகசாதனை படைக்க விரும்பி தொடர்ந்து பயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் 10 கிலோமீட்டர் ஸ்கேட்டிங்ல் குறைந்தபட்ச நேரத்தில் விரைவாக செல்லும் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றார். அதன்படி 10. 1 கிலோமீட்டர் தூரத்தை 40 நிமிடம் 42 வினாடிகளில் கடந்து புதிய உலகசாதனை படைத்தார். இந்த சாதனை ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். பொதுமக்கள் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் உலக சாதனை செய்துள்ளதாக இளைஞர் ஜனகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News