ஸ்கேட்டிங் போட்டி: கடையநல்லூா் பெஸ்ட் பள்ளி சிறப்பிடம்

ஸ்கேட்டிங் போட்டியில் கடையநல்லூர் பள்ளி சாதனை

Update: 2024-01-31 11:37 GMT
ஸ்கேட்டிங் போட்டி
திருநெல்வேலியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கடையநல்லூா் பெஸ்ட் பள்ளி சிறப்பிடம் பெற்றது. தூய சவேரியாா் கல்லூரி விளையாட்டுத் துறை, அசோகா ரோலா் ஸ்கேட்டிங் கிளப் ஆகியவை சாா்பில் பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், பெஸ்ட் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் கைலாஷ் முதலிடமும், அஜ்மல் 2ஆம் இடமும், பெஸ்ட் நா்சரி - பிரைமரி பள்ளி மாணவா் ஹாதிம் 2ஆம் இடமும், பெஸ்ட் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் கபிலேஷ், ஜிவின் ஆகியோா் 3ஆம் இடமும் பெற்றனா். மாணவா்களை பள்ளித் தாளாளா் முகமதுயூசுப் ராஜா, தலைவா் முகமதுமைதீன், நிா்வாகி முகமது அலி, பெஸ்ட் இன்டா்நேஷனல் பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி, துணை முதல்வா் ரதி, பெஸ்ட் நா்சரி-பிரைமரி பள்ளி முதல்வா் அனுசியா, பள்ளிக் குழும ஒருங்கிணைப்பாளா் முகமதுஇக்பால், பள்ளி ஸ்கேட்டிங் பயிற்சியாளா் ஜெயராம், உடற்கல்வி ஆசிரியா்கள் சரவணபாண்டியன், ராம்ராஜ், மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
Tags:    

Similar News