திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 24.96 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-03-06 04:43 GMT
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை இரவு வந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினா் சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் ஆண் பயணி ஒருவா் அணிந்திருந்த ( ஜீன்ஸ் ) பேன்டில் பிரத்யேக பை வைத்து தைத்து, அதில், 390 கிராம் பசைவடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.24.96 லட்சமாகும். இதையடுத்து சுங்கத்த்துறையினா் அந்த தங்கத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.