காரில் கடத்தி செல்லப்பட்ட குட்கா - மடக்கி பிடித்த போலீஸ்
சாத்தூர் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செயதனர்.
Update: 2024-02-29 05:26 GMT
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், சாத்தூர் அம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், ஆகியோர் சாத்தூரிலிருந்து காரில் சுமார் 15,000 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை சிவகாசி அருகே உள்ள வெல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் கடைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக விருதுநகர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் வெல்லூரில் உள்ள முருகன் என்பவர் கடைக்கு வந்த விருதுநகர் தனிப்படை போலீசார் புகையிலை கடத்தி வந்த கார் மற்றும் காரில் இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் 23 ஆயிரம் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.