அரசு பேருந்தில் பாம்பு - பதறிய ஓட்டுநர், நடத்துனர்

வேலூரில் இருந்து கோவிந்த ரெட்டி பாளையத்துக்கு சென்ற அரசு பேருந்தில் பாம்பு இருந்ததால் ஓட்டுநர், நடத்துனர் பதட்டமடைந்தனர்.;

Update: 2024-06-18 05:20 GMT
அரசு பேருந்தில் பாம்பு  - பதறிய ஓட்டுநர், நடத்துனர்

பேருந்துக்குள் நுழைந்த பாம்பு 

  • whatsapp icon
வேலுாரில் இருந்து அணைக்கட்டு அடுத்த ஊசூர்,கோவிந்தரெட்டிபாளையத்துக்கு அரசு உள்ளூர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேண்பாக்கம் பணிமனைக்கு செல்ல ரயில்வே கேட் பகுதியை கடக்கும் போது ஓட்டுனர் இருக்கைக்கு மேல் பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுனர் அதிர்ச்சியடைந்துள்ளார். மாங்காய் மண்டி அருகே பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பாம்பை வெளியேற்றினர். அப்போது ஒருவர், கம்பால் அடித்ததில் பாம்பு இறந்துள்ளது. பேருந்தில் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்துக்குள் பாம்பு எப்படி நுழைந்தது என்று தெரியாமல் ஓட்டுனரும், நடத்துனரும் குழப்பமடைந்தனர்.
Tags:    

Similar News