ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்பு தொல்லை - ஊழியர்கள் அச்சம்
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் புதர் மண்டி காணப்படும் நிலையில் கருவூலம் உள்ள ஓய்வூதியர் பிரிவு பகுதி மற்றும் அதன் அருகிப் தேநீர் கடை போன்ற பகுதியில் ஒட்டிய இடங்களில் பாம்புகள் பதுங்கிக் கொள்ளும் அளவிற்கு புதர் மண்டி காணப்படுகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் தேநீர் கடைக்குள் புகுந்த நிலையில் அதை தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று கருவூலத்தின் ஓய்வூதியர் பிரிவில் ஜன்னல் மீது 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று தென்பட்ட நிலையில் அருகில் உள்ள அறை வழியே சென்று பதுங்கிக் கொண்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டு அங்கு வந்தவர்கள் பாம்பை பிடிக்கும் முயற்சி தோல்வியுற்றதை தொடர்ந்து இன்று மீண்டும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர் மண்டி உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.