கோழிகளை முழுங்கிய பாம்பு - வனப்பகுதியில் விடுவிப்பு
பள்ளப்பட்டி அருகே தான் வளர்க்கும் கோழிக்குஞ்சுகளை விழுங்கிய பாம்பை அடித்து கொள்ளாமல் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தவரின் மனித நேய செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.
Update: 2024-01-14 04:19 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி நகராட்சி ஒட்டி உள்ள பகுதி பரந்த நிலப்பரப்பு உள்ள பகுதியாக உள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஊட்டி மன்சூர் என அழைக்கப்படும் இஸ்லாமியர் வீட்டின் அருகே கோழிகளை வளர்த்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று இரவு கோழிகளை கூடையில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலை கோழி கூடைகளை திறந்து கோழியை வெளியேற்றுவதற்காக சென்றபோது, சுமார் 4- அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று கூடையில் இருந்த ஐந்து கோழி குஞ்சுகளை விழுங்கிவிட்டு நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட மன்சூர் அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து, ஒரு சாக்கு பைக்குள் விட்டு, எடுத்துச் சென்று வனப்பகுதியில் பாம்பை விடுவித்துள்ளார். இந்த காட்சியை அவரது மகள் வீடியோவாக பதிவிட்டு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தக் காட்சி தற்போது பள்ளப்பட்டி பகுதியில் வைரலாகி வருகிறது.