குமரியில் புதிய குற்றவியல் சட்டத்தில் இதுவரை 42 வழக்குகள் பதிவு !

கன்னியாகுமரியில் புதிய குற்றவியல் சட்டத்தில் இதுவரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-07-08 05:16 GMT
குமரியில் புதிய குற்றவியல் சட்டத்தில் இதுவரை 42 வழக்குகள் பதிவு !

வழக்கு

  • whatsapp icon

மத்திய அரசின் உத்தரவின் படி கடந்த 1-ம் தேதி முதல் மூன்று பழைய குற்றவியல் சட்டம் புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் விபத்து வழக்குகள், தற்கொலைகள் உள்ளிட்ட சில முக்கிய வழக்குகள் அடங்கும். அதன்படி குமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவில் மாநகரில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் முதல் நாளில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதில்  கன்னியாகுமரியில் போக்குவரத்து விதிகளை மீறி .பொதுமக்கள் ஆபத்து ஏற்படும் வகையில் மதுபோதையில் வாகன ஓட்டியதாக ஒருவர் மீது 281 பி என் எஸ் பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டன. கன்னியாகுமரியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு மாநிலத்தின் முதல் வழக்காகும். இதை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை ஏழு நாட்களில் மாவட்டம் முழுவதும் புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 42 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News