நீலகிரி; இதுவரை 8 வேட்பாளர்கள்!

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட இதுவரை 8 வேட்பாளர்கள் வேட்புமனு படிவங்களை பெற்றுள்ளனர்.

Update: 2024-03-22 09:14 GMT

நீலகிரி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் திருவிழா சூடு பிடித்து விட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். மற்றொருபுறம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வசதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு, உள்ளே வரும் பொதுமக்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லையை குறிக்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளான நேற்று வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்றும் ஒரு வேட்பாளர் கூட வராததால் ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதால் அவர்கள் கடைசி இரண்டு நாட்களில் வந்து மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் சுயேட்சை வேட்பாளர்கள் ஆரம்ப நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களும் வரவில்லை. இந்த நிலையில் தற்போது வரை தி.மு.க., நாம் தமிழர், பா.ஜ.க.,ட்சிய என 3 வேட்பமனு படிவங்களையும், 5 வேட்புமனு படிவங்களை சுயேட்சைகளும் வாங்கி உள்ளனர்.
Tags:    

Similar News