மூலனூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் மூலனூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளை தொடர்ந்து அச்சுறுத்துவதாக புகார். இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-19 12:10 GMT
மூலனூர் பகுதியில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல். திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் எல்லைக்குட்பட்ட எழுதாமலசு என்ற கிராமத்தில் வசித்து வரும் சலவை தொழிலாளி ராமசாமி என்பவர் தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகள் பூமிகா வயது 14 மகன் உதயநிதி வயது 10 ஆகியோருடன் எழுகாம்பரசு கிராமத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் ராமசாமி வீட்டு அருகில் பன்னி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் சபரி ராஜேந்திரன் சிவா என்ற மூன்று பேரும் சேர்ந்து ஆதரவற்ற நிலையில் உள்ள இந்த குடும்பத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் மற்றும் பெண் குழந்தையிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் தற்போது அந்த பெண் குழந்தை மனரீதியாக பாதிக்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அவசர உதவி எண் 100 என்ற எண்ணுக்கு அழைத்து தங்களுக்கு மிகுந்த கொடுமைகளை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மூலனூர் காவல்துறை எடுக்கவில்லை எனவும் மனைவியை இழந்த நிலையில் தன் மகளை பாதுகாக்க முடியவில்லை என்று அவரது தந்தை ராமசாமி கண்ணீர் மல்க கூறியது மிகவும் மன வேதனை அளிப்பதாக உள்ளது. இது பற்றி தேசிய குழந்தைகள் நல ஆணையத்திற்கு புகார் அளிக்க உள்ளதாகவும் இதுபோன்ற மூலனூர் பகுதிகளில் சென்ற மாதம் இதே போன்ற சிறுமை கற்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆதரவற்ற இந்த சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பெண் குழந்தையை பாதுகாக்குமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.