அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது

சிங்கப்பூரில் நடந்த விழாவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

Update: 2024-06-03 14:53 GMT

சிங்கப்பூரில் நடந்த விழாவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.


ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளையின் தி பிராகிரஸ் குளோபல் விருதுகள், ஆண்டுதோறும் கல்வி துறையில் சிறந்து பணியாற்றி வரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச கருத்தரங்கு சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்தியது. இதில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுகாதாரத்துறை சார்ந்த ஆய்வு கட்டுரை குறித்து பேசினார்.

தொடர்ந்து உயர் கல்வி நிறுவனத்தின் கீழ் சிறந்த சமூக பணி ஆற்றுவதன் அடிப்படையில் "சமூகம் மற்றும் சமூக பணிகளில் சிறந்த பணியாற்றுபவர்" என்ற விருதை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் முன்னாள் இணை பேராசிரியரும், தற்போதைய மலேசியா மணிபால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹபிபுல்லாகான், தி பிராகிரஸ் குளோபலின் நிர்வாக இயக்குனர் கோஷ், மெகா போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் டாம் ஸ்மஹேன் ஆகியோர் வழங்கினர். விருது பெற்ற டீன் செந்தில்குமாருக்கு பல்கலைக்கழக வேந்தர் கணேசன் மற்றும் துணைத்தலைவர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News