மண்மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்!

இலுப்பூர் மதர் தெரசா வேளாண்மை கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள் மண்மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்.

Update: 2024-04-05 06:20 GMT
இலுப்பூர் மதர் தெரசா வேளாண்மை கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள் கல்லுாரி முதல்வர் (பொ) ராமச்சந்திரன், குழு ஆசிரியர் உதய நந்தினி, சுபாஷ் சந்திரபோஸ், ஆசி ரியை கவிதா, பிரின்லி சசிதா ஆகியோர் ஆலோச னையின்படி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் மண் வளத்தை பெருக்க ஜீவாமிர்தம் மற்றும் கன ஜீவாமிர்தம் தயா ரித்தல், மண் மாதிரி சேகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். ஜீவா மிர்தம் மூலம் மண்ணில் உள்ள மண் புழுக்கள், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என் றும்,கன ஜீவாமிர்தத்தை நீர் குறைவான இடங்களில் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News