விராலிமலை ஊராட்சிகளில் மண் பரிசோதனை முகாம்!
விராலிமலை ஊராட்சிகளில் மண் பரிசோதனை முகாம்.
Update: 2024-05-23 06:01 GMT
விராலிமலை வட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மேலபச்சக்குடி, வேலூர், வடுகப்பட்டி, பேராம்பூர், சூரியூர், களமாவூர், நாங்குபட்டி, நடுப்பட்டி, தொண்டைமான் நல்லூர், ஆகிய ஊராட்சிகளில் மண்மாதிரி சேகரிக்கும் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.நடுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் வேளாண் அலுவலர் முகமது ரபி (தரக் கட்டுப்பாடு) பங்கேற்று விவசாயிகளுக்கு மண் பரிசோதனை குறித்து விளக்கினார். நிகழ்வில் வேளாண் அலுவலர் ஷீலாராணி, உதவி வேளாண் அலுவலர் பர்க்கானா பேகம் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் ராஜா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் செய்தனர்.