8 வருட பிரச்சனைக்கு தீர்வு : வட்டாட்சியாருக்கு குவியும் பாராட்டுகள்!

சிறு காசாவயல் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவில் வட்டாட்சியர் சமரச பேச்சு வார்த்தையால் திறக்கப்பட்டது. இதனால் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங்கிற்க்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

Update: 2024-07-01 03:47 GMT

8 வருட பிரச்சனைக்கு தீர்வுபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள சிறு காசாவயல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ளது இந்த கோவிலில் பொதுவாக அப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று கூடி திருவிழா நடத்துவது வழக்கம் என கூறப்படுகிறது இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நாடகத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .

இதனால் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் தலைமையில் 2017 - ஆம் ஆண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது 8- ஆண்டுகளை கடந்த நிலையில் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராம மக்கள் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் முன்னிலையில் நேற்று  கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி எட்டு ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை திறந்து சுவாமி கும்பிட வைத்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  எட்டு ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் சமரச பேச்சுவார்த்தை அடிப்படையில் கோவில் திறந்து சாமி கும்பிட வைத்ததால் வட்டாட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிகழ்ச்சியின் போது வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் கிராம பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News