கிராமசபை கூட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி.

Update: 2023-11-02 10:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  பச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள துவாரகா அவன்யூ பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி தர்மசீலன் என்பவரது வீட்டிற்கு அருகில் பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் வீடு கட்டி வருகிறார். 

இந்த வீட்டு கட்டிட வேலைக்காக  பழங்கரை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தனியே குழாய் மூலம் முறைகேடாக தண்ணீரை எடுத்துவருவதாகவும், இதனால் ஒரு மணிநேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பதினைந்து நிமிடம்மட்டுமேவிநியோகிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் சார்பாக தர்மசீலன் துணைத் தலைவரிடம் கேட்டுள்ளார். இதற்கு கோபம் அடைந்த துணைத் தலைவர் தர்மசீலனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகாவும்,

இதனால் மனமுடைந்த தர்மசீலன் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர். கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து, எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் துணைத்தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுங்கள், எடுக்கவில்லை என்றால் தீ குளிக்கப் போகிறேன் என கூறி தன் மீது ஊற்றிக் கொண்டார். 

உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து அவரிடம் இருந்து பெட்ரோலை பிடுங்கி கீழே ஊற்றி மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் தர்மசீலன் தன் மனைவியுடன் அங்கிருந்து சென்றர்.

Tags:    

Similar News