சோமேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா !
சங்ககிரி: சோமேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராசிக்குட்பட்ட மலையடிவாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு சௌந்திரநாயகி உடனமர் அருள்மிகு சோமேஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் பல ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட மலையடிவாரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் அருள்மிகு சோமேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி கூடுதுறை காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி சங்ககிரியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தினை கோவிலின் முன்பு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் வைத்து கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் செய்து தீர்த்த குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் வைத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து கோபுர கோபுரத்திற்கு சென்று கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். தொடர்ந்து சௌந்திரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணைகள் காட்டப்பட்டது. அப்போது சேலம் திமுக எம் பி டி.எம்.செல்வகணபதி, பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, முன்னாள் அமைச்சர் சரோஜா சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர்.