சங்கரன்கோவில் அருகே தாயை எரித்துக் கொன்ற மகன் கைது
சங்கரன்கோவில் அருகே குடிக்க பணம் தர மறுத்த தாயை எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2023-12-24 06:31 GMT
சங்கரநாராயணன்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூா் கிராமத்தைச் சோ்ந்த ஞானமுத்து மனைவி ராமலட்சுமி (65). இவரது மகன் சங்கரநாராயணன்(43) குடிக்க பணம் கேட்டு தாய் ராமலெட்சுமியிடம் வற்புறுத்தியதாகவும், அவா் பணம் தர மறுத்ததால் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ராமலெட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தாா். சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிா் மற்றும் போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனா். இதையடுத்து சங்கரநாராயணனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.