தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது

தூத்துக்குடியில் மது போதையில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-30 16:18 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடியில் மது போதையில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரவியபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மாரியப்பன் (53). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் சுடலை கணேஷ் (24), அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனை அவரது தந்தை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாரியப்பனை, அவரது மகன் சுடலை கணேஷ் சரமாரியாக கத்தியால் குத்தினாராம்.

இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப் பதிந்து, சுடலை கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News