சேதுபாவாசத்திரம் அருகே தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
சேதுபாவாசத்திரம் அருகே குடிக்காதே என தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-29 16:31 GMT
சேதுபாவாசத்திரம் அருகே குடிக்காதே என தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் கட்டையன் என்கிற வேதீஸ்வரன் (28) மீனவர், இவர் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் உள்ளவராம்.
வியாழக்கிழமை இரவு போதையில் வீட்டுக்கு வந்தவரை அவரது தாய் நாகம்மாள் குடித்து விட்டு வந்ததற்காக கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த வேதீஸ்வரன் அருகில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர் .