திருப்பூரில் இன்று தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூரில் இன்று தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.;

Update: 2024-06-01 07:26 GMT
இல பத்மநாபன்

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழகத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் "கலைஞர் அறிவாலயம்" "தளபதி அரங்கில்" மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையிலும், எனது (இல.பத்மநாபன்) முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

Advertisement

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கழக மகளிர் அணி துணைச்செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News