தென்னிந்திய மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை விழா

பங்கேற்கும் அனைவருக்கும் ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

Update: 2024-06-20 06:23 GMT

மாற்றுத்திறனாளிகள்

மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஜி எம் எஸ் பவுண்டேஷன் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் பேட்டியளித்த நிறுவனரும் தலைவருமான ராஜகுமாரி ஜீவகன், அன்பையும் நல்லிணக்கத்தையும் விதைப்போம் போதை கலாச்சாரத்தை வேரறுப்போம் என்ற தலைப்பில் கதம்ப விழா மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் மீது நாம் கொண்டுள்ள பொறுப்புணர்வும் அக்கறையும் அவர்கள் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கி சமூகப் பொதுநீரோட்டத்தில் ஒன்றிணைப்பதும் அவர்களுக்கான மேடையை உருவாக்கி ஊனம் என்பது சாதிக்க தடை இல்லை என்பதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் தனித்திறன்களை ஊக்குவித்து சாதனையாளர்கள் ஆக்குதல் ஆகும்.இவ்விழாவில் ஆட்டிசம் அறிவுசார் குறைபாடு உடையோர் மூளை முடக்குவாதம் முதுகு தண்டுவட பாதிப்படைந்தோர்செவித்திறன் குறைபாடு உடையோர் பார்வை மாற்றுத்திறனாளிகள் கை கால் பாதிக்கப்பட்டு மற்றும் சர்க்கரநாற்காலி பயன்படுத்துவோர் அனைவரும் இரண்டு பிரிவுகளாக அதாவது வயது 13 முதல் 19 வரை மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளார்கள்.மேலும் அவர்களுக்கு நடனம் பாட்டு இசைக்கருவிகள் சிறுகதை கூறுதல் புகைப்படம் காமெடி யோகா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.பங்கேற்கும் அனைவருக்கும் ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் துணைத் தலைவர் விஜய தர்ஷன்,ரேபா தேவி மணிகண்டன், பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்
Tags:    

Similar News