பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்பி வாழ்த்து
திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.;
Update: 2024-06-19 08:25 GMT
எஸ்பியுடன் பதவி உயர்வு பெற்ற தலைமை காவலர்கள்
இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பாக பணி நிறைவு செய்த 22 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. புதிதாக பதவி உயர்வு பெற்ற 22 சிறப்பு உதவி ஆய்வாளர்களை எஸ்பி ஜெயக்குமார் எஸ் பி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து கூறினார்.