போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எஸ்பி அறிவுறுத்தல் !

போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை குற்ற கலந்தாய்வு கூட்டம் முலம் எஸ்பி அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2024-07-06 12:06 GMT
போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை  எஸ்பி அறிவுறுத்தல் !
 கலந்தாய்வு கூட்டம்
  • whatsapp icon

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  தலைமையில் இன்று 06.07.2024 ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகள், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், - பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் அருகில் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  எனவும் பொதுமக்கள் தங்கள் தகவல்களை கன்னியாகுமரி மாவட்டத்தின் 7010363173 எண்ணிற்கு  அளிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும்,      குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான POCSO குற்றங்கள் சம்பந்தமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்கு சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள்வது, சமூக வலைதளங்களில் தனிப்பட்ட போட்டோக்களை போட்டு மிரட்டினால் உடனடியாக புகார் அளிக்க  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.      திருட்டு நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டும் எனவும்,CCTV பொருத்தவும், வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கூறவும்  அறிவுறுத்த வேண்டும்.

மேலும் இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை முடித்து விரைவில் நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும்,      பொது இடங்களில் மது அருந்துபவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி செல்பவர்கள்  மீது அதிகபடியான வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.     கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகள், நீதிமன்ற பிடியாணையை  நிறைவேற்றுவதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.

Tags:    

Similar News