கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்படுத்திய காவலரை பாராட்டிய எஸ் பி
கைக்குழந்தையுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தை சீர்படுத்திய காவலரை பாராட்டிய எஸ் பி ஜெயக்குமார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 10:12 GMT
கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்படுத்திய காவலரை பாராட்டிய எஸ் பி
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் மணிகண்டன் என்பவர் பணி முடித்து ஓய்வில் அவரது கைக்குழந்தையுடன் சொந்த பணியாக வந்தபோது அந்த வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கண்டவர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கைக்குழந்தையுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் நின்று போக்குவரத்தை சரி செய்துள்ளார். இதனை அறிந்த எஸ்பி ஜெயக்குமார் எஸ் பி அலுவலகத்தில் அவரை நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டினார்.