திமுக சார்பில் கட்சியினருக்கு பேச்சாற்றல் பயிற்சி முகாம்

Update: 2023-11-19 07:59 GMT

பயிற்சி முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசியல் வாதிகளிடையே பேச்சு திறமைகுறைந்து வருகிறது. இதை தவிர்க்க நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பேச்சு பயிற்சி முகாம் வாரம் ஒருமுறை நடத்தப்படுகிறது. நகர தி.மு.க. செயலர்கள் விஜய்கண்ணன், ஞானசேகரன் முகாமை துவக்கி வைத்தனர். பேச்சாளர் அன்பழகன் பயிற்சியினை துவக்கி வைத்தார். இது குறித்து மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க. மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியிலும் இருந்த முன்னாள் தலைவர்கள், பேச்சாளர்கள் இரவு பகலாக பேசித்தான் மத்திய, மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்தனர். அண்ணா,கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, உள்ளிட்ட தலைவர்கள் இரவு, பகலாக தேர்தல் பிரசாரங்கள் செய்வார்கள்.இவர்களின் பேச்சை கேட்க பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். கட்சியின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, ஒவ்வொரு கட்சி சார்பில் தலைமைக்கழக பேச்சாளர்கள் என நியமனம் செய்யப்பட்டனர். மூத்த அரசியல்வாதிகள் மேடையில் பேசும் முன்பாக, தலைமைக்கழக பேச்சாளர்கள் கட்சியின் கொள்கைகள், கட்சி உருவான விதம், கட்சி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் செய்த தியாகங்கள், ஆகியவற்றை பொதுமக்களிடம் எடுத்துரைப்பார். தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மற்றவர்களிடம் பேசுவது குறைந்து விட்டது. மொபைல் போனில் குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் பேசி வருவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதை தவிர்க்க இளைஞர்கள் பேச்சாற்றல் பெற வேண்டும் என்பதற்காக பேச்சு பயிற்சி மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

Tags:    

Similar News