திருப்புவனத்தில் பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

திருப்புவனத்தில் பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-03-18 14:34 GMT

சிறப்பு அபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் சமேத ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு இரண்டாம் திருநாளில் கற்பக விருட்ச வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது.

இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் திருநாளில் மண்டபத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ முருக பெருமான், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சுவாமி, ஸ்ரீ பிரியா விடை அம்மன், ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோபுர தீபம், கும்ப தீபம், நாக தீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்று உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் பக்தர்கள் தெய்வங்களை வாகனங்களில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து புஷ்பவனேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் கற்பக விருச்சக வாகனத்திலும்,

ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் காமதேனு வாகனத்திலும், எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வான வெடிகள் உடன் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வந்த சுவாமி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர் .

Tags:    

Similar News