தென்காசி அருகே அரசு மருத்துவமனைக்கு விருது
தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது வழங்கி பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 03:11 GMT
செங்கோட்டை மருத்துவமனை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா வழிகாட்டுதல் படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் காயகல்ப விருது ரூ.2 லட்சம் பரிசும் அறிவித்துள்ளது. இதனால் இந்த மருத்துவரை பொதுமக்களும் மற்றும் சமூக அலுவலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.