குமாரபாளையத்தில் சிறப்பு பஜனை

குமாரபாளையத்தில் சிறப்பு பஜனை அன்னதானம் நடந்தது.

Update: 2024-01-02 14:57 GMT

ஐயப்ப சுவாமிகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், குளத்துக்காடு கிளை சார்பில், தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் 22ம் ஆண்டுவிழா, திருவிளக்கு பூஜை, சிறப்பு பஜனை நடந்தது. 52ம் ஆண்டு யாத்திரை செல்லவிருக்கும் வேணு குருசாமி தலைமை வகித்தார்.

காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் சபரி மலையில் நடப்பது போன்று, ஆபரண பெட்டி எடுத்து வருதல், கருப்ப சுவாமி பாதுகாப்புக்கு வருதல், கற்பூர ஆழி ஆகியன இடம்பெற்றன. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இந்த திருவீதி உலா நடந்தது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்பன் சுவாமி, 18 படி சிறப்பு அலங்காரத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார். பவர் ஹவுஸ் கொங்கு மண்டபத்தில் திருவிளக்கு பூஜை, சிறப்பு பஜனை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஷ், மோகன், சேகர், முருகன், பாலன், கணேசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News