கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம் | கிங் நியூஸ் 24x7
கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓ.சௌதாபுரம் சார்பில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் முனைவர்.ப.அசோக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இராசிபுரம் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர்.ஆர்.செந்தில்குமார் அவர்கள் இரத்ததானத்தின் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த முகாமிற்கு செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓ.சௌதாபுரத்திலிருந்து வருகை புரிந்து முகாமை சிறப்பித்தார்கள்.
மேலும் இந்த இரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இரத்ததானம் செய்தார்கள். மதியம் 12.30 மணியளவில் முகாம் இனிதே நிறைவுற்றது. முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.