சிறப்பு பேருந்து இயக்கம்

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம் நாளை முதல் துவங்குகிறது.

Update: 2024-06-14 09:34 GMT
சிறப்பு பேருந்து 

நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய வார இறுதி நாட்களிலும் மற்றும் 16, 17-ந் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) ஆகிய சுபமுகூர்த்த தினங்களிலும் அரசு பஸ் களில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நாளை 165 பஸ்களும், நாளை மறு நாள் 200 பஸ்களும், 16-ந்தேதி 95 பஸ்களும் என மொத்தம் 460 சிறப்பு பஸ்கள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரி (வழி இ.சி.ஆர்.), திருவண்ணாமலை (வழி-ஆற்காடு, ஆரணி), திருவண்ணாமலை (வழி -காஞ்சீபுரம், வந்தவாசி) ஆகிய இடங்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக நாளை 40 பஸ்களும், நாளை மறுநாள் 40 பஸ்களும் என மொத்தம் 80 பஸ்கள் இயக்கப்படுகிறது.

எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பஸ்களை இயக் கவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News