திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
Update: 2024-06-12 16:06 GMT
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம். கலெக்டர் அலுவலகத்தில் 21ந் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வசதியாக, மற்ற துறைகளுடன் இணைந்து சிறப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாமில் நலவாரிய அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை இந்த முகாமில் விண்ணப்பித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்...