வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக  தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்  நீர்ஜா கபூர் தெரிவித்தார்.

Update: 2023-12-27 06:32 GMT

நீர்ஜா கபூர்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக  தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்  நீர்ஜா கபூர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மோட்டார் வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் மனித உயிர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆழ்ந்த கவலையில் உள்ளது. பாலிசிதாரர்களின் சொத்து இழப்பைத் தணிக்க அவர்களுடன் நிற்க பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உடனடியாக நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் உதவிகளைத் தெரிவிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களின் பாலிசிதாரர்கள் அனைவருக்கும் எங்கள் நிறுவனத்திடமிருந்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் விடுமுறை நாட்களில் திறந்திருக்கும்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காப்பீட்டாளர்களின் உதவிக்காக பிரத்யேக உதவி மையம் உள்ளது. கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு கூடுதலாக 3 அதிகாரிகள் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.3500 வரையிலும், தனியார் கார்கள் மற்றும் டாக்சிகளுக்கு ரூ.15,000 வரையிலும், வணிக வாகனங்களுக்கு ரூ.25,000 வரையிலும் வாகனத்தை உடனடியாக பழுது நீக்குதல், பேட்டரி மாற்றுதல், ஆயில்/ஸ்பார்க் பிளக் மாற்றுதல், உள்ளிட்ட செலவுகளுக்கு  எளிமையான முறையில் உடனடி தீர்வு வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது.  வீட்டுச் சொத்துக்களுக்கு, ரூ.1 லட்சம் வரையிலான கொள்முதல் பில்களை வலியுறுத்தாமல், செட்டில் செய்யப்படும். பாலிசிதாரர்களின் கோரிக்கை தீர்வுகளுக்கான 27.12.2023 அன்று திருநெல்வேலியிலும், 28.12.2023 அன்று தூத்துக்குடியிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News