சிவகாசியில் 54 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் சிவகாசியில் 54 இடங்களில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஆர்வமுடன் கிராம மக்கள் பங்கேற்றனர்.;

Update: 2024-06-29 08:37 GMT
சிவகாசியில் 54 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்...

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டில் வருகிற 2030-ம் ஆண்டிற்குள் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதால் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்பட்டு கிராமங்களில் உள்ள குடிசைகள்,ஓட்டு வீடு, ஆஸ்பெட்டாஸ் வீடுகளை கணக்கெடுத்து இதனை மாற்றி அமைக்க வசதியாக பயனாளிகள் தேர்வு செய்ய அரசு முடிவு செய்ததது.அதன்படி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Advertisement

பள்ளபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் தலைமையிலும் துணைத் தலைவர் லோகேஸ்வரி, ஊராட்சி செயலர் செல்லப்பாண்டி முன்னிலையில் ஆனையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் தலைமையிலும் துணைத் தலைவர் முத்துமாரி,ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையிலும் விஸ்வநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்நாகராஜ் தலைமையிலும் துணைத் தலைவர் நாகேந்திரன்,ஊராட்சி செயலர் ஹரிபாஸ்கரன் முன்னிலையிலும் சாமிநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி பாலகுருசாமி,துணைத்தலைவர் முருகேஸ்வரி சேதுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் செய்திருந்தார்.

Tags:    

Similar News