வளவனூரில் உலக நன்மைக்காக சிறப்பு தியானம்
வளவனூரில் உலக நன்மைக்காக சிறப்பு தியானம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-20 15:36 GMT
சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டவர்கள்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வடக்கு அக்ரஹாரத்தில் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் அமைந்துள்ளது. இங்கு புண்ணிய ஸ்ரீ பிரஜா பிதா பிரம்மாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு வளவனூர் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் உலக நன்மைக்கான சிறப்பு தியானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பிரம்மாகு மாரர், பிரம்மாகுமாரிகளும், ஆன்மிக நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பு தியானம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை பிரம்மாகுமாரர் நிர்வாகி செல்வமுத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.