பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடந்த சிறப்பு மனு விரசாரணை முகாம்

மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-14 03:17 GMT

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடந்த சிறப்பு மனு விரசாரணை முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் புதன் கிழமையன்று பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக புகார் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி டிசம்பர் 13-ம் தேதி - பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுவைப் பெற்றார். மேலும் மனு அளித்த பொதுமக்களிடம் பேசிய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி புகார் மனு தாரரின் புகாரினை கேட்டறிந்து அப்புகாரினை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டு புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 23 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News