மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

தி.வைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடந்த பைரவர் ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-07-01 08:45 GMT
மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

பைரவர் ஹோமம் 

  • whatsapp icon
திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ஹோமம் நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூல பாலகால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சன்னதி முன் மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. பின்னர் கோ பூஜை, கஜபூஜை, லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வஸ்திரயாகம், புஷ்ப யாகம் முடிந்து யாகசாலை பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி பைரவரை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News