1500 பள்ளிமாணவ மாணவிகளுக்கு சிறப்பு பூஜை
குடியாத்தம் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று வரும் 1500,பள்ளிமாணவ மாணவிகளுக்கு சிறப்பு பூஜை.
Update: 2024-02-25 15:36 GMT
குடியாத்தம் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று வரும் 1500,பள்ளிமாணவ மாணவிகளுக்கு சிறப்பு பூஜை. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஸ்ரீ தேவி மாசுடா அம்மன் ஆலயத்தில் பௌர்ணமியாக பூஜையில் விரைவில் பொது தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று வரும் 1500பள்ளிமாணவ மாணவிகளுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்களன வழங்கினார்கள். ஸ்ரீ வராகி தாசன் சாமிகள் அவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார். கோயில் ஐயர் ஆனந்தகுமார் பூஜை செய்தார் மேலும் பொது மக்களுக்கு பிரசாத பை மற்றும் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். குறிப்பாக மாதா மாதம் இந்த குழுவினர்கள் பௌர்ணமி யாக பூஜை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.