எம்பி கோபிநாத் பணி சிறக்க சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மிட்டப்பள்ளி சுப்பிரமணியார் கோயிலில் பதவி ஏற்ற எம்பி கோபிநாத் பணி சிறக்க காங்கிரஸ் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Update: 2024-06-26 01:02 GMT

எம்பி கோபிநாத் பணி சிறக்க சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி சுப்பிரமணியார் கோயிலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக பதவி ஏற்ற கோபிநாத் பணி சிறக்க, சிறப்பு பூஜை செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் திருமால் தலைமையில், நிர்வாகிகள் நாகராஜ், முருகன், கோவிந்தன், சத்தியராஜ், ராஜாமணி, ஏழுமலை, அண்ணாமலை, பொன்னுசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News