கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-22 15:42 GMT

சிறப்பு அலங்காரம்

சேலம் மாவட்டம்,சங்ககிரி மலையில் மீது உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவின் 2வது நாளையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா பிப்.20 ஆம் தேதி இரவு அன்று பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. இதனையடுத்து 2வது நாளான (பிப் 22) சுவாமிக்கு பல்வேறு திவ்ய, திரவியபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக,அலங்காரங்கள் செயய்ப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News